அதிக கட்டணம் கேட்ட நடத்துநரை கத்தியால் குத்திய பயணி!

அரசு பேருந்தில் நடத்துநர் அதிகக் கட்டணம் கேட்டதை அடுத்து, பயணி ஒருவர் நடத்துநரை கத்தியால் முயன்றார். இதில், நடத்துநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

அரசு பேருந்தில் நடத்துநர் அதிகக் கட்டணம் கேட்டதை அடுத்து, பயணி ஒருவர் நடத்துநரை கத்தியால் முயன்றார். இதில், நடத்துநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நேற்று முதல் அரசுப் பேருந்துகளில் பயணச் சீட்டின் விலைகள் ஏற்றப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சில இடங்களில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சில இடங்களில் பேருந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த தொட்டம் பட்டி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (27) மற்றும் அவரது சகோதரர் வேலன் (30) இருவரும் நேற்று மாலை மத்தூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு செல்வதற்காக அரசு விரைவு பேருந்தில் ஏறி உள்ளனர்.

அப்போது நடத்துநர் வழக்கமான கட்டணத்தை விட அதிகமான அளவில் கேட்டுள்ளார். இல்லையென்றால், வழியில் இறங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதத்தில் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வேலன் வேலைக்காக தனது கைப்பையில் இருந்த கத்தியால் நடத்துநரை குத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், நடத்துநர் சாமார்த்தியமாக விலகியுள்ளார். இதனால், பெரும் ஆபத்தில் இருந்து நடத்துநர் தப்பித்துள்ளார்.

உடனே, வேலன் பேருந்தில் இருந்து குதித்து அங்குள்ள வயல்வெளிகள் வழியே தப்பி ஓடியுள்ளார். விஷயம் தெரியவர தப்பியோடிய வேலனை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

You'r reading அதிக கட்டணம் கேட்ட நடத்துநரை கத்தியால் குத்திய பயணி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதால் போலீஸ் சரமாரி அடி: வாகனஓட்டி உயிரிழப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்