டாஸ்மாக் கடைகளை நிரந்தரமா எப்போ மூடப் போறீங்க..? சரிமாரியாக கேள்வி கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

HC Madurai branch questions tn govt on tasmac closure

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன், 2016 முதல் டாஸ்மாக் குறித்த பல்வேறு புள்ளி விபரங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், அக்ரஹாரம் அருகே அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசு வழக்கறி ஞரிடம் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக எப்போது மூடுவீர்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும் 2016-ல் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்த போது இருந்த கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? தற்போது இருக்கும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்றும் கேள்வி எழுப்பினர்.

2016 முதல் தற்போது வரை தமிழகத்தில் மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை? புதிதாக திறக்கப்பட்ட கடைகள் எத்தனை? டாஸ்மாக் மூலம் மாவட்டம் வாரியாக எவ்வளவு வருவாய் வருகிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு புள்ளி விபரங்களுடன் டாஸ்மாக் தலைவர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You'r reading டாஸ்மாக் கடைகளை நிரந்தரமா எப்போ மூடப் போறீங்க..? சரிமாரியாக கேள்வி கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திராவிட நாட்டுக்காக 'சுடுகாடு' சென்ற திமுகவினர் எத்தனை பேர் ...? பாமக மீது மட்டும் விமர்சனம் ஏன்..? அன்புமணி காட்டம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்