6 மாத சம்பள பாக்கி - செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி

6 மாதம் சம்பள பாக்கியை வழங்காததை அடுத்து, வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 மாதம் சம்பள பாக்கியை வழங்காததை அடுத்து, வாலிபர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகேயுள்ள அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (எ) பாலு (32). இவர், கடந்த முன்று வருடங்களுக்கும் மேலாக தத்தாதிரிபுரத்தில் பஞ்சாயத்து சார்பில் தண்ணீர் விடும் பணியினை வருகிறார்.

ஆனால், இவருக்கு கடந்த 6 மாத காலமாக பஞ்சாயத்து நிர்வாகம் சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. இதனால் விரக்கியடைந்த சந்திரசேகரன் வியாழனன்று அப்பகுதியிலுள்ள செல்போன் டவரின் உச்சிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவம் இடத்திற்கு வந்து சந்திரசேகரனை சமாதானப்படுத்தி கிழே இறக்கினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

You'r reading 6 மாத சம்பள பாக்கி - செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மோடியிடம் கை கொடுக்காமல் கன்னத்தில் ஒத்திக் கொண்டார் எடப்பாடி - பழ கருப்பையா தாக்கு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்