வேற வழியே இல்லை.. 4 தொகுதிகளுடன் அதிமுகவிடம் சரணாகதி அடைந்த நீ புகழ் பிரேமலதா

admk dmdk alliance finalised

பல்வேறு இழுபறிக்கு இடையே அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது.

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தேமுதிக நடத்தி வந்த கூட்டணி நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. கடைசியில் அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட தேமுதிக இன்று அக்கூட்டணியில் கைகோர்த்துள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் வந்தனர்.

அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டணி முடிவானது. ஒப்பந்தத்தில் விஜயகாந்தும் ஓர் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

உடன்பாடு கையெழுத்தான பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக முழு ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்தார்.

You'r reading வேற வழியே இல்லை.. 4 தொகுதிகளுடன் அதிமுகவிடம் சரணாகதி அடைந்த நீ புகழ் பிரேமலதா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 18 சட்டசபைத் தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் இல்லை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்