`நிலவில் பீத்தோவனின் பியானோ இசை - `வேல்ர்டு பெஸ்ட் சென்னை சிறுவனின் குட்டி ஆசை

I want to go to the Moonplay Beethovens Moonlight Sonata says Lydian Nadhaswaram

சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவன் ரூ.7 கோடி பரிசு வென்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ். லிடியனின் அக்கா அமிர்தவர்ஷினி. வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார். அக்கா அமிர்தவர்ஷினியும் நன்றாக பியானோ வாசிப்பார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம்.இசைப் பள்ளி மாணவன் லிடியன் என்பது குறிப்பிடத்தக்கது.
.
லிடியனைப் பற்றி அவரது தந்தை கூறுகையில், ``18 மாத குழந்தையாக இருந்தபோது தான் லிடியன் முதன்முதலாக பியானோ வாசித்தான். நான் எது சொல்லிக் கொடுத்தாலும் நினைவில் வைத்துக் கொள்வான். இசை மீது அவனுக்கு ஏற்பட்ட ஆசையால் 4 மாத குழந்தையாக இருந்தபோது தனது விரல்களைத் தட்டித் தட்டி இசையமைப்பதைப் பார்த்தேன் .அவன் டிவி பார்க்க மாட்டான், வீடியோ கேம்ஸ் விளையாட மாட்டான். அவனுக்கு எப்பொழுதும் இசை பற்றிய சிந்தனையே. நண்பர்களும் அவ்வளவாக இல்லை. லிடியனும் சரி, அவரின் அக்காவும் சரி என் இசைப் பணியில் உதவியாக உள்ளனர்.

லிடியன் 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார். 2 கைகளால் 2 பியானோக்களை வாசிக்கும் திறன் கொண்டவர் .சிபிஎஸ் தொலைக்காட்சி நடத்திய தி வேர்ல்ஸ்ட் பெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டு லிடியன் நாதஸ்வரம்,ரூ. 7 கோடி பரிசுத் தொகை பெற்றுள்ளார் .

இசை ஆல்பங்கள் வெளியிடும் ஆசை உள்ளது. மேலும் இசையமைப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார். முக்கியமாக நிலவுக்குச் சென்று அங்கு பீத்தோவனின் பியானோ இசை வாசிக்க வேண்டும் என்பதே லிடியனின் கனவு.

You'r reading `நிலவில் பீத்தோவனின் பியானோ இசை - `வேல்ர்டு பெஸ்ட் சென்னை சிறுவனின் குட்டி ஆசை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலகை திரும்பிப் பார்க்க வைத்த சென்னை சிறுவன்! – பாராட்டு விழா எடுத்த ஏ.ஆர் ரஹ்மான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்