`நான்கு வாரிசுகள்... மீண்டும் தம்பிதுரை - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

aiadmk announced lok sabha candidate list

அதிமுக கூட்டணியில், பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி, என் ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், மற்றக்கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாமக, தேமுதிக இடையே ஏற்பட்ட இழுபறி காரணமாக தொகுதிகளை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கல் தீர்க்கப்பட்டு தொகுதி பட்டியல் இன்று காலை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து தற்போது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கரூரில் மீண்டும் தம்பிதுரையும், தென் சென்னையில் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகின்றனர். தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்; கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி போட்டியிடுகின்றனர். திருநெல்வேலியில் மனோஜ்பாண்டியன் களமிறக்கப்பட்டுள்ளார். முழு வேட்பாளர் பட்டியல் இதோ..... ``திருவள்ளூர்(தனி) - வேணுகோபால், சென்னை தெற்கு - ஜெயவர்தன், காஞ்சிபுரம் (தனி) - மரகதம் குமரவேல், கிருஷ்ணகிரி - கேபி முனுசாமி, திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஆரணி - செஞ்சி வெ. ஏழுமலை, சேலம் - சரவணன், நாமக்கல் - காளியப்பன், ஈரோடு - வெங்கு (எ) மணிமாறன், திருப்பூர் - ஆனந்தன், நீலகிரி (தனி)- தியாகராஜன், பொள்ளாச்சி- மகேந்திரன், கரூர்- தம்பிதுரை, பெரம்பலூர்- சிவபதி, சிதம்பரம் (தனி)- சந்திரசேகர், மயிலாடுதுறை- ஆசைமணி, நாகப்பட்டினம் (தனி)- தாழை.ம. சரவணன், மதுரை- ராஜ்சத்யன், தேனி- ரவீந்ரநாத் குமார், திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்" ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இதேபோல் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், `பூந்தமல்லி -  வைத்தியநாதன், பெரம்பூர் - ராஜேஷ், திருப்போரூர் - S ஆறுமுகம், சோளிங்கர் -  சம்பத், குடியாத்தம் - கஸ்பா மூர்த்தி, ஆம்பூர் -  ஜோதிராமலிங்க ராஜா, ஒசூர் - ஜோதி, பாப்பிரெட்டிபட்டி -  கோவிந்தசாமி, அரூர் - சம்பத் குமார், நிலக்கோட்டை - தேன்மொழி, திருவாரூர் -  ஜீவானந்தம், தஞ்சாவூர் -  காந்தி, மானாமதுரை - நாகராஜன், ஆண்டிப்பட்டி -  லோகிராஜன், பெரியகுளம் -  முருகன், சாத்தூர் - ராஜவர்மன், பரமக்குடி -  சதன் பிரபாகர், விளாத்திகுளம் -  சின்னப்பன்" உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். ஓசூரில் பாலகிருஷ்ணா ரெட்டி மனைவி ஜோதிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

You'r reading `நான்கு வாரிசுகள்... மீண்டும் தம்பிதுரை - அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தீராத புற்றுநோய்.... - காலமானார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்