கமலின் டார்கெட் இதுவா இருக்குமோ வெளியாகும் வேட்பாளர்கள் பட்டியலில் ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ்

today kamal will release candidate list

மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட உள்ளது.

எந்த கட்சிகளுடனும் கூட்டணி அமைக்காமல் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி நேற்று செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்தியக் குடியரசு கட்சியுடன் கைகோர்த்துள்ளது. முன்னதாக, வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிந்து இறுதி பட்டியல் தயாரிக்கும் வேளையில் நிர்வாகிகள் இறங்கி உள்ளதாக  தகவல் வெளியாகின.

இந்த பட்டியலில், பிக்பாஸ் பிரபலம் சினேகன், நகைச்சுவை நடிகை கோவை சரளா, நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பிரபலங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, கமலில் சொந்த மாவட்டமான ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகத் தெரிகிறது.

ராமநாதபுரத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைகளை  சமாளிக்க, கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு, சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால், கமலின் டார்கெட் ராமநாதபுர தொகுதியாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.     

You'r reading கமலின் டார்கெட் இதுவா இருக்குமோ வெளியாகும் வேட்பாளர்கள் பட்டியலில் ஒளிந்திருக்கும் சர்ப்ரைஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் - தெருத்தெருவாக நடந்து சென்று ஓட்டு வேட்டை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்