தேர்தல் நேரத்தில் சொத்துகளை முடக்கி கார்த்தி சிதம்பரத்துக்கு செக் - அமலாக்கத்துறை அதிரடி

ED attaches properties of Karti Chidambaram worth Rs 22 crores

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கோரி வந்தது. ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன் அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி அளித்தது. இதற்கிடையே, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இதற்கிடையே, நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இதற்காக தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. இதே வழக்கில் தொடர்புடைய மூன்று நிறுவனங்களின் சொத்து மதிப்புகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

You'r reading தேர்தல் நேரத்தில் சொத்துகளை முடக்கி கார்த்தி சிதம்பரத்துக்கு செக் - அமலாக்கத்துறை அதிரடி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வரிசைக்கட்டி நிற்கும் சிறப்பான ஹாலிவுட் படங்கள்… பார்த்து ரசிக்க தயாரா இருங்க

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்