தமிழர்களுக்கு விரோதமாக...மத்திய பணியில் தமிழர்கள் வாய்ப்பு பறிப்பு...கவனித்தோமா...

Tamils are not get for central government job

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடக்கும் முறைகேடுகளே காரணம் என்கின்றனர் நிபுணர்கள். மண்டல அளவிலான தேர்தல் முறையை நடைமுறைப் படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மத்திய அரசுப் பணிகளில் சேரும் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. அண்மையில், தெற்கு ரயில்வேயில் 1,765 பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் கூட 1,600 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டது வட மாநிலத்தவர்கள். வருமான வரித்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் 10 சதவீதங்கள் கூட  தமிழர்கள் பணி அமர்த்த படவில்லை. தபால், தணிக்கை, சுங்கம், பாஸ்போர்ட் உள்ளிட்ட மத்திய அரசின் பிற துறைகளிலும் இதே நிலைதான்.

அண்மையில், ‘செண்டர் எக்சிசை நிறுவனம் 569 பேரை வேலைக்கு எடுத்தார்கள். இதில், 10 பேர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை. தமிழகம் மட்டுமல்ல தென்னாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் பணியமர்த்தப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் அல்லது தமிழ் தெரிந்தால் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆனால், ஹிந்தி தெரிந்தவர்கள் மட்டுமே வேலைக்கு வருகிற காரணத்தினால், தமிழ்நாட்டு அலுவலகங்களில் தமிழ் இளைஞர்கள் வேலை செய்ய முடியாத சுழல் உருவாகியுள்ளது. அதனால், காலம் தாழ்த்தாமல் மாநில மொழியிலான, மாநில அளவிலான தேர்வை நடத்தி வேலைக்கு ஆட்களை எடுக்க வேண்டும்’ என நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசுத் தேர்வு 1996 வரை மண்டல அளவில் நடைபெற்றது. அதன்பின், இந்திய அளவில் ஒரே முறையென மாற்றியதும் தமிழர்களுக்கு விரோதமாக அமைந்தது. தமிழில் கேள்விகள் கேட்பதற்குப் பதில் ஹிந்தி, ஆங்கிலம் கட்டாயம் ஆனது.

வட மாநிலங்களில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன், மத்திய அரசுப் பனி குறித்த விழிப்புணர்வும், பயிற்சிகளும் அதிகம் கிடைக்கின்றன. அது போன்ற நிலை தமிழ்நாட்டில் இல்லை. இதுவும் ஒரு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கணினி சார்ந்த படிப்பில், தமிழர்களின் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது முதல் மத்திய அரசுப் பணியில் நாட்டம் குறைந்து விட்டது. நிலையில்லா வெளிநாட்டு பணிக்காக, மத்திய அரசுப் பணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மத்திய பணியில் தமிழர்களின் ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தத் தகுந்த சட்டம் இயற்றுவதும் அவசியம். 

You'r reading தமிழர்களுக்கு விரோதமாக...மத்திய பணியில் தமிழர்கள் வாய்ப்பு பறிப்பு...கவனித்தோமா... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வீட்டைக் காப்பாற்றாதவர் ....நாட்டை எப்படிக் காப்பாற்றுவார் ...நடிகர் நாசரின் தம்பி குமுறல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்