சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கற நாம ...5 வருஷத்துக்கு ஒரு முறை வர்ர தேர்தலுக்கு... கொஞ்சம் யோசிக்கலாமே

how much importance to give cinema as same emphasis is to election

செல்போன், இன்டெர்நெட் வருவதற்கு முன்னால மக்களுக்கு பெரிய பொழுது போக்கா இருந்தது சினிமாதான். அதனால அந்த காலக் கட்டத்துல புதுப்படங்கள் வெளியாகும் போது எல்லா திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் திருவிழாக் கூட்டம் போல இருக்கும்.

ஆனால் என்னைக்கு செல்போன், இன்டர்நெட் வந்ததோ அது முதல் மக்களின் பழக்க வழக்கமும் மாறி விட்டது.
இப்பவும் ஒரு படத்துக்கு போவதற்கு முன்னால் அந்த படத்தின் ஹீரோ யாரு? டைரக்டர்? கதை என்ன? பாடல்கள் எப்படி இருக்கும்? படத்தோட விமர்சனம் எப்படி இருக்கு, அந்த தியேட்டரில் படம் பார்த்தா நல்லா இருக்குமான்னு ஒரு 2 மணி நேர படத்துக்கு நாம இவ்வளவு விஷயங்களை அலசின பிறகுதான் அந்த சினிமாவை பார்க்கவா?, வேண்டாமா?ன்னு முடிவு செய்கிறோம்.

ஆனா, நம்ம ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதில் எந்த மாதிரி செயல்படுகிறோம்ன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நம்மை ஆட்சி செய்யப் போற ஆட்சியாளர்களை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறோம்னு நினைச்சு பாருங்க?. நல்ல வாக்காளருக்கு முதல்ல நமக்கு (தொகுதிக்கு) என்ன தேவைன்னு தெரியணும். நல்ல வாக்காளர்கள் தான் நல்ல ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க முடியும். அதனால ஒன்றுக்கு ரெண்டு தடவை யோசித்து ஓட்டுப் போடலாமே? அதனால நம்ம ஜனநாயகமும் வலுப்படும்.

 

You'r reading சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கற நாம ...5 வருஷத்துக்கு ஒரு முறை வர்ர தேர்தலுக்கு... கொஞ்சம் யோசிக்கலாமே Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்