மே 23க்கு பிறகு...தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்! -செந்தில் பாலாஜி ஆருடம்

dmk candidate senthil balaji says stalin became tn cm

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்,18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்திருக்க கூடிய நிலையில், அடுத்தாக ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது.  

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார். மே 19ம் தேதி நான்கு தொகுதி சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாவாவரத்துப்பட்டி பகுதியில் இருந்து இன்று தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய செந்தில் பாலாஜி, சேந்தமங்களம், எல்லப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று ஆதரவு திரட்டினார்.

அப்போது பேசிய அவர், ‘காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி அரவக்குறிச்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் எனக் கூறினார். அதோடு, நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 60 சதவீத வாக்குகள் தி.மு.க-வுக்கு ஆதரவாக இருக்கும். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தி.மு.க அமோகமாக வெற்றி பெரும் என்றார். மே மாதம் 23ம் தேதிக்குப் பிறகு 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக அட்சி பொறுப்பில் அமருவார்’ என்று பேசினார்.  

வீல் சேரில் வந்து கடமையை ஆற்றினார் தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன்!

You'r reading மே 23க்கு பிறகு...தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின்! -செந்தில் பாலாஜி ஆருடம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எனக்கு எண்டே கிடையாது... முன்பை விட அதிகளவில் டவுன்லோடு செய்யப்படும் டிக்டாக்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்