சேலத்தில் ஒரே நாளில் 63 பேரை விரட்டி விரட்டி கதறி குதறிய வெறி நாய்

drunkenness dog bite 63 people in a day

சேலத்தில் ஒரே நாளில் வெறி நாய் ஒன்று 63 பேரை விரட்டி விரட்டி கடித்து குதறியது. இறுதியில் அந்த நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.

சேலம் கிச்சிபாளையத்தில் அதிகாலை 5 மணிக்கு 75 வயது முதியவரை கடித்த கருப்பு நிற வெறி நாய் ஒன்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் விரட்டி விரட்டி கடித்து குதறியது. கலராம்பட்டி, காந்திமகான் தெரு, என அந்த நாய் ஓடிய இடமெல்லாம் மக்களை வெறி கொண்டு கடித்து குதறியது.

சேலம் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு நாய்க்கடி தடுப்பூசி கையிருப்பு இருந்ததால் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து வந்தவர்களுக்கும் ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்படாமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் 63 பேரை அந்த வெறி நாய் கடித்து குதறி இருந்தது. இந்த தகவல் அறிந்து பொதுமக்கள் கடும் பீதி அடைந்தனர்.

வெறிநாய் குறித்து சேலம் மாநகராட்சி ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதனை பிடிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பிடிக்க சென்றவர்களையும் அந்த நாய் கடிக்க பாய்ந்ததால் அதனை ஊர் மக்கள் அடித்து கொன்றனர்.


கோடை வெயில் சுட்டெரிக்கும் காலங்களில் நாய்கள் இது போன்று வெறி கொண்டு அலைவது வாடிக்கை என்றாலும் ஒரே நாளில் 63 பேரை கடித்து குதறியது இதுவே முதல்முறை என அரசு மருத்துவர்கள் கூறினர். நாய் கடியால் ரேபிஸ் என்று அழைக்கப்படும் வைரஸ் தாக்காமல் இருக்க தடுப்பூசி அரசு மருத்துவனையில் மட்டுமே போடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளுக்கு முகநூலில் தடை

You'r reading சேலத்தில் ஒரே நாளில் 63 பேரை விரட்டி விரட்டி கதறி குதறிய வெறி நாய் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பரிசுப் பெட்டகமே மீண்டும் கேட்போம்! டி.டி.வி. தினகரன் பேட்டி!!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்