`ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை - இலங்கை மக்களுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

Actor Rajinikanths mourning for sri lankan bomb blasts

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறன. இந்நிலையில் இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று காலை முதல் நடந்த குண்டு வெடிப்பில் 207 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது. பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகை உலுக்கியுள்ள இந்த சம்பவத்த்தை கண்டித்து கண்டனக்குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ``ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். இதேபோல் ``இலங்கையில் இருந்து வெளிவரும் செய்தி இதயத்தை நொறுக்கும் வகையில் உள்ளது. இலங்கை மற்றும் அதன் மக்களுக்காக என்னுடைய பிரார்த்தனை துணை நிற்கும்" என கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ``இலங்கை மக்களுக்கு உறுதுணையாக இந்தியா நிற்கும்" என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

You'r reading `ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை - இலங்கை மக்களுக்கு ரஜினிகாந்த் இரங்கல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் தான் செய்துள்ளார்கள்' - இலங்கை குண்டுவெடிப்பில் 207 பேர் பலி; 450 பேர் படுகாயம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்