இன்னைக்கு உங்க நிழல் தரையில் விழாதாம்hellip தமிழகத்தில் இன்று நிழல் இல்லா நாள்!

today zero shadow day in chennai

தமிழகத்தில் ’'நிழல் இல்லாத நாள்’’ என்ற அபூர்வ நிகழ்வு இன்று வானில் ஏற்பட்டது.

அது என்ன ‘’நிழல் இல்லாத நாள்’’..அப்படி என்றால் என்ன என்ற கேள்வியா?

சூரியன் நம் தலைக்கு நேராக மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது, நமது நிழல் காலுக்குக் கீழே இருக்குமாம். இவ்வாறு, சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். மேலும், அவர்கள் கூறும்போது, சூரியன் செங்குத்தாக வரும்போது, ஒரு பொருளுடைய நிழலின் நீளம், ஆண்டுக்கு இரண்டு முறை பூஜ்ஜியமாகிறது என்கிறார்கள். இப்படி, பூஜ்ஜியமாகும் நாளே ‘’நிழல் இல்லாத நாள்’’ எனப்படுகிறது. இந்த ’நிழல் இல்லாத நாள்’’ அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம் என்றால் பாருங்களேன்.

புதுச்சேரியில் கடந்த 21ம் தேதி ‘‘நிழல் இல்லா நாள்’’ காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நிகழ்ந்தது. இதை தொடர்ந்து, சென்னையில் இன்று ’நிழல் இல்லாத நாள்’’ அதிசய நிகழ்வு இன்று நண்பகல் 12.07 மணிக்கும், வேலுாரில் 12:17க்கும் நிகழும் என்று அறிவியல் இயக்கம் தெரிவித்து இருந்தது. அதன்படி, ஆண்டுக்கு 2 முறையே நிகழும் '’நிழல் இல்லாத நாள்’' நிகழ்ச்சியைக் காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு, அபூர்வ நிகழ்வை கண்டு ரசித்தனர்.

சரியாக சூரியன் நம் தலைக்கு மேல் இருக்கும் போது, நம்முடைய நிழல் நமது காலுக்கு அடியில் இருக்கும். அரிய நிகழ்வான இன்று உங்களின் நிழலும் பூமியில் விழுகிறதா? இல்லையா? என்று நீங்களும் சோதித்துப் பார்த்து இயற்கையின் அதிசயத்தைக் கண்டு மகிழுங்கள்!

தளபதி 63 படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நபருக்கு விஜய் கொடுத்த 'ஷாக்'

You'r reading இன்னைக்கு உங்க நிழல் தரையில் விழாதாம்hellip தமிழகத்தில் இன்று நிழல் இல்லா நாள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 4 தொகுதி இடைத்தேர்தல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்