7 பேரை விடுவிக்க எடுத்த முடிவு..! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

chennai high court oder tn gov for rajiv gandhi murder case 7 victims

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களை, விடுதலை செய்வது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை ஒருமனதாக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இருப்பினும், விடுதலை தொடர்பான எந்த நடவடிக்கைகளும் இந்நாள்வரை எடுக்கவில்லை.

இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரையைச் செயல்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். மேலும், தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பரிசீலிக்கவில்லை, 6 மாதமாக பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் புகார் அளித்திருந்தார்.

இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு நளினியின் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 27-க்கு ஒத்திவைத்துள்ளனர். அதோடு, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவை செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படும்...ஆனால்? –சத்யபிரதா சாஹூ ‘பதில்’

You'r reading 7 பேரை விடுவிக்க எடுத்த முடிவு..! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெண்ணை கொலை செய்து விட்டு நாடகமாடிய ரவுடி கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்