தமிழகம் முழுவதும் உஷார்! போலீசுக்கு அரசு எச்சரிக்கை!!

Tamilnadu Government alerted all district collectors and police officers to take precautionery security steps

ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக லாரி டிரைவர் கிளப்பிய வதந்தியால், தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.க்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஓசூரில் இருந்து நேற்று பகலில் மர்ம ஆசாமி ஒருவர் போனில் பேசி திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலுங்கானா, மராட்டியம், கோவா உள்ளிட்ட தென்மாநிலங்களில், முக்கியமான நகரங்களில் குண்டு வெடிப்பு நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக தென்னக ரெயில்களில் குண்டு வெடிக்கும் வாய்ப்பு அதிகம். இதற்காக ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் நுழைந்துள்ளார்கள் என்ற தகவலை கூறிவிட்டு, அந்த மர்ம நபர் போனை வைத்துவிட்டார்.

இதனையடுத்து, பெங்களூரு போலீஸ் டிஜிபி, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்து கடிதம் அனுப்பினார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக டிஜிபி, கூடுதல் டிஜிபிக்கள், அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், கலெக்டர்கள் என அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் பேக்ஸ் மூலம் இந்த தகவலை அனுப்பியுள்ளார். அதில், பெங்களூரு காவல் கட்டுப்பாட்டறைக்கு வந்த தகவலையும், அம்மாநில டிஜிபியின் கடிதத்தையும் குறிப்பிட்டு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு - பலியானோர் எண்ணிக்கையில் குளறுபடி

You'r reading தமிழகம் முழுவதும் உஷார்! போலீசுக்கு அரசு எச்சரிக்கை!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 12 மணி நேரத்தில்...உருவாகிறது ஃபனி புயல்! –எச்சரிக்கை நடவடிக்கைகள் ‘ஜரூர்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்