உன்னிப்பாக கவனிக்கும் ரஜினி... 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார்!

rajini watching tn election he may soonly enter politics

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினி தனித்து போட்டியிடுவார் என்று அவரின் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், நடக்க உள்ள சட்டமன்றம் இடைத்தேர்தல் ஆகியவற்றை ரஜினி உன்னிப்பாக கவனித்து வருகிறார். யார் யார் எங்கு நிற்கிறார்கள், அவர்கள் எப்படி பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள், எங்கு போகிறார்கள் என்பது குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறார் ரஜினி. ஏற்கனவே, சொல்லியது போல் இந்த சட்டமன்றத் தேர்தல் தான் அவரது இலக்கு. 234 தொகுதிகளிலும் ரஜினி தனித்தே போட்டியை எதிர்கொள்வார். தேர்தல் முடிவுகள் வரட்டும். பொறுத்திருங்கள்’ என்றார்.

அண்மைக்காலமாக, ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து சத்யநாராயணா முக்கிய செய்திகளைக் கொடுத்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க, ரஜினி மக்கம் மன்றம் சார்பில் தேர்தலுக்கான களப்பணிகளைத் தீவிரப்படுத்துமாறு உறுப்பினர்களுக்கு அறிக்கை வாயிலாக நிர்வாகிகள் உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தல் ரஜினியின் அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. 

திமுக முன்னாள் எம்.பி.வசந்தி ஸ்டான்லி காலமானார்; திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

You'r reading உன்னிப்பாக கவனிக்கும் ரஜினி... 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `திரும்பவும் ஒரு அட்டாக் நடக்கலாம்' - மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்புகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்