பணியாளர்கள் போராட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

chennai metro rail service affected

பணியாளர்கள் போராட்டம் எதிரொலியாக, மெட்ரோ ரயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு காரணமாக இன்று ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையத்தின் நிரந்தரப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, மெட்ரோ ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மெட்ரோ ரயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், உடனே தீர்வு கிடைக்கவில்லை.

இதனையடுத்து இன்று .இந்த விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால் மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருந்தது.
ஆனால் இன்று சில மெட்ரோ ரயில் நிலையங்களில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறுகளை சரி செய்ய பணியாளர்கள் வராததால் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். தற்போது சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் வண்ணாரபேட்டை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ சேவை எப்போதும் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தால் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில்வே பணியாளர்கள் திடீர் போராட்டம்

You'r reading பணியாளர்கள் போராட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவியை கைது செய்த போலீசார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்