தமிழகத்தில் இனி இன்ஜினியர் சான்றுடன்தான் வீடு கட்ட வேண்டும்!

engineer report needed to built house in tamilnadu

அரசிடம் பதிவுபெற்ற இன்ஜினீயரின் சான்றுடன்தான் தமிழகத்தில் இனி வீடு கட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சென்னை போரூரை அடுத்து உள்ள மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 28ல் பெய்த மழையில் 11 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இந்த கோர விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதோடு, கட்டுமானத் துறைகளில் உள்ள அலட்சிய போக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்தது.

இதன் பிறகு, கட்டுமானத் துறையில் கூடுதல் விதிமுறைகளை அமல்படுத்த, கட்டுமானத் துறை சங்கங்கள் உள்ளிட்ட இதர அமைப்பிடம் ஆலோசனை கருத்துகளைக் கேட்டு, கட்டுமான துறைக்கான புதிய விதிமுறைகளை கடந்த பிப்ரவரியில் அரசாணையாக வெளியிட்டது தமிழக அரசு. இதனையடுத்து, தமிழகத்தில் புதிதாக வீடுகள், மல்டிபிள் காம்ளக்ஸ் உள்ளிட்ட இதர கட்டுமானங்கள் அனைத்தும் அரசிடம் பதிவுபெற்ற இன்ஜினீயரின் சான்றுடன் கட்டப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி,  12 மீட்டர் உயரக் கட்டங்கள், 12 மீட்டருக்கு மேல், 18 மீட்டருக்குள் கட்டப்படும் கட்டடங்கள் பதிவுபெற்ற கட்டடக் கலை நிபுணரின் அனுமதி அவசியம்.

கட்டுமான பொறியியல் (architect engineering, civil engineering) படித்தவர்கள், தங்களின் பட்டப்படிப்பு மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படியில் கிரேடு வரிசையில் பதிவு செய்து கொள்ளலாம். இன்ஜினீயர் சான்று பெற சென்னையை சேர்ந்தவர்கள் மாநகராட்சி அல்லது சி.எம்.டி.ஏ-வில் பதிவு செய்யவேண்டும். பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பதிவு செய்து கொள்வது பற்றின விரிவான விவரங்களை http://faceatp.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தமிழக அரசின் இந்த உத்தரவால், இனி வீடுகள் உள்ளிட்ட இதர கட்டடங்கள் அனைத்தும் இன்ஜினீயர் சான்றுடன் கட்டப்பட வேண்டியது அவசியம். அவ்வாறு, கட்டப்படும் கட்டடங்களில் ஏதேனும் இடிந்து விழுந்தாலோ, அல்லது விரிசல் உள்ளிட்ட கட்டத்திற்கு சேதம் ஏற்பட்டாலோ அதன் முழு பொறுப்பும் சான்று வழங்கிய இன்ஜினீயரையே சேரும். அதன் பிறகு, அவர்களின் சான்று ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.  

அண்ணா பல்கலை., துணைவேந்தர் முதலாளி போல் துடிப்பு காட்டுகிறார்..! -ராமதாஸ் சாடல்

You'r reading தமிழகத்தில் இனி இன்ஜினியர் சான்றுடன்தான் வீடு கட்ட வேண்டும்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 230 கி.மீ வேகம்... ஒடிசாவை புரட்டிப் போட்டது ஃபானி... பூரி அருகே அதிதீவிர புயலாக கரை கடந்தது!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்