அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் தேர்தல்! விரைவில் ஆட்சி மாற்றம்! சொல்கிறார் செந்தில்பாலாஜி

who next tn cm will decide four by election

அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளதாக, அத்தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22ம் தேதி தொடங்கி இறுதி வேட்பாளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் அனல் பிறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் மலைக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈட்டுப்பட்டுள்ளார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும், தமிழகத்தில் அடுத்த முதல்வரை தீர்மானிக்கப் போவது, நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்தான். அதிமுக ஆட்சி கவிழ்வது உறுதி. மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று கூறினார்.

அரவக்குறிச்சி தொகுதியில் ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் வசிக்க வேண்டிய ஏழ்மையான சுழல் இங்கு நிலவுகிறது. தான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வானால், இந்த தொகுதியைச் சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்ட 3 சென்ட் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார் செந்தில்பாலாஜி.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளர்களின் அரசியல் சதுரங்க ஆட்டம் பற்றி தெரியுமா?

You'r reading அடுத்த முதல்வரை தீர்மானிக்கும் தேர்தல்! விரைவில் ஆட்சி மாற்றம்! சொல்கிறார் செந்தில்பாலாஜி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விதிமுறைகளை மீறி பணியாளர்கள் நியமனம்! ரூ.1.50 கோடி லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் மீது நடவடிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்