எதிர்வீட்டு பெண்ணை தாக்கிய சபாநாயகரின் டிரைவர் கைது தண்ணீர் பஞ்சம் படுத்தும்பாடு

Speakers driver was arrested for attacking a lady near his house

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர், அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுபாஷினி(28). இவரது கணவர் மோகன் நேற்றிரவு அந்த குடியிருப்பில் உள்ள குடிநீர் மோட்டார் பம்புசெட்டை ஆன் செய்தார்.

அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் தமிழக சபாநாயகர் தனபாலின் கார் டிரைவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் என்பவர், ‘‘ சம்ப்பில்(தொட்டி) தண்ணியே இல்லே, நீ எதற்கு மோட்டாரை போடுகிறாய்?’’ என்று மோகனிடம் கோபமாக கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், இது கைகலப்பானது. அப்போது மோகனை ஆதிமூலம் எட்டி உதைத்துள்ளார்.

உடனே, மோகனின் மனைவி சுபாஷினி ஓடி வந்து ஆதிமூலத்திடம் சண்டை போட்டார். உடனே வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சுபாஷினியை ஆதிமூலம் தாக்கினார். சுபாஷினி வாய்த்தாடையில் தாக்கியதில் வலது கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். அவருக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது.

கத்தியால் வெட்டிய தலைமை செயலக பணியாளரும், சபாநாயகரின் ஓட்டுநருமான ஆதிமூலராமகிருஷ்ணனை சங்கர் நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பாஜக தலைவராக அமித்ஷா தொடர்வார்..! மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு..!

You'r reading எதிர்வீட்டு பெண்ணை தாக்கிய சபாநாயகரின் டிரைவர் கைது தண்ணீர் பஞ்சம் படுத்தும்பாடு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'மும்மொழி கொள்கை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும்'- கஸ்தூரி ரங்கன் பேட்டி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்