சட்டப்பேரவையில் புனிதம் இல்லை காந்தி, அண்ணா புகைப்படங்களை அகற்றுங்கள் - ராமதாஸ் காட்டம்

தமிழக சட்டப்பேரவையில் வரும் இன்று திங்கட்கிழமை [பிப்ரவரி 12ஆம் தேதி] முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் தமிழக அரசு திடீரென அறிவித்தது.

தமிழக சட்டப்பேரவையில் வரும் இன்று திங்கட்கிழமை [பிப்ரவரி 12ஆம் தேதி] முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்படும் என்று நேற்று முன்தினம் தமிழக அரசு திடீரென அறிவித்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தைத் திறக்கக் கூடாது என்று திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த எதிர்ப்பையும் மீறி, சட்டப்பேரவையில் இன்று காலை ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டு விட்டது. இனி அங்கு புனிதம் இல்லை. குறைந்தபட்சம் அங்கு ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ள காந்தி, பெரியார், அண்ணா உள்ளிட்ட 10 பேரின் படங்களை அகற்றி விடலாமே. அவர்களின் புனிதமாவது காக்கப்படும் அல்லவா?” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading சட்டப்பேரவையில் புனிதம் இல்லை காந்தி, அண்ணா புகைப்படங்களை அகற்றுங்கள் - ராமதாஸ் காட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 75 மாடி; 528 அறைகள் - உலகின் மிகப்பெரிய ஓட்டல் துபாயில் திறப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்