டிடிவி தினகரனுக்கு ஒன்றும் இல்லை- அதிமுக அமைச்சர் தாக்கு

டிடிவி தினகரனுக்கு கட்சியும் இல்லை, கொடியும் இல்லை, இலட்சியமும் இல்லை, தொண்டர்களும் இல்லை என்று அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனுக்கு கட்சியும் இல்லை, கொடியும் இல்லை, இலட்சியமும் இல்லை, தொண்டர்களும் இல்லை என்று அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழ் சமூகத்திற்காக பாடுபட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தியாகத்தை போற்றும் வகையில் சட்டப்பேரவையில் படம் திறக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஆண்டாள் மண் குறித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை கருத்து குறித்த கேள்விக்கு, “இது தமிழ் மண். கருத்து சுதந்திரம் இருப்பதால் யாரும் எந்த கருத்தையும் சொல்வதற்கு தடை இல்லை என்றாலும், அக்கருத்துகள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும், டிடிவி தினகரனுக்கு கட்சியும் இல்லை, கொடியும் இல்லை, இலட்சியமும் இல்லை, தொண்டர்களும் இல்லை. டிடிவி தினகரன் தமிழக அரசு மீது கற்பனையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

You'r reading டிடிவி தினகரனுக்கு ஒன்றும் இல்லை- அதிமுக அமைச்சர் தாக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமித் ஷா தன் மகனுக்கு பக்கோடா தொழிலை சொல்லிக் கொடுக்கட்டும் - குஷ்பூ காட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்