மதில் மேல் பூனை..! வேலூரில் வெற்றி யாருக்கு? கடைசிக் கட்டத்தில் மீண்டும் இழுபறி

vellore lok sabha election hanging on the wall

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதலே முன்னணி நிலவரம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கும் இடையே கடும் இழுபறியாகவே இருந்தது.முதல் 6 சுற்றுகள் வரை முன்னணியில் இருந்த ஏ.சி.சண்முகத்தை அதன் பின், பின்னுக்கு தள்ள ஆரம்பித்தார் கதிர் ஆனந்த். அடுத்தடுத்து 4 சுற்றுகளில் விறுவிறுவென 20 ஆயிரம் வாக்குகள் வரை முன்னிலை பெற்றார் கதிர் ஆனந்த், அதன் பின் இந்த முன்னிலை படிப்படியாக குறைந்து இப்போது 10, 451 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். இதனால் மீண்டும் நிலவரம் இழுபறியாக உள்ளது

தற்போதைய முன்னணி நிலவரம் :

ஏ.சி.சண்முகம் (அதிமுக): 4,37,679

கதிர் ஆனந்த் (திமுக): 4, 48,130

தீபலட்சுமி (நாம் தமிழர்) : 24,410

இன்னும் சுமார் 1 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ண வேண்டிய நிலையில் வெற்றி பெறப்போவது யார்? என்பதை கணிக்க முடியாத அளவுக்கு வாக்கு எண்ணிக்கை நிலவரம் ஒவ்வொரு சுற்றிலும் இழுபறியாகி வருகிறது. இதனால் வெற்றி யாருக்கு? என்பது மதில் மேல் பூனையாக உள்ளதால் திமுக, அதிமுக தரப்பில் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரை இனிமேல் இளைஞர்கள் வழிநடத்துவார்கள்; பிரதமர் மோடி பேச்சு

You'r reading மதில் மேல் பூனை..! வேலூரில் வெற்றி யாருக்கு? கடைசிக் கட்டத்தில் மீண்டும் இழுபறி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுயுக பெற்றோரின் கவனத்துக்கு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்