100 அடியை கடந்தது மேட்டூர் அணை : ஒரே நாளில் 20 அடி உயர்வு இன்று நிரம்ப வாய்ப்பு

Mettur dam level crosses 100 ft, may reach full capacity in one day

மேட்டூர் அணை வரலாற்றில் 65-வது முறையாக இன்று காலை 100 அடியை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் 20 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்த நிலையில் இன்று இரவுக்குள் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது கனமழை. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால், கபினி, ஹேமாவதி,ஹாரங்கி, கே.ஆர்.எஸ் அணைகள் வேகமாக நிரம்பின.இதனால் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்படும் நீரின் அளவும் கடந்த ஒரு வாரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து மேட்டூர் அணையின் நீர் மட்டமும் கிடு கிடுவென உயர்ந்தது.

இதனால் கடந்த 8-ந்தேதி 43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று அதிகாலை 100 அடியை தாண்டியது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 20 அடிக்கும் மேலாக நீர் மட்டம் உயர்ந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2 .5 லட்சம் கன அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 3 லட்சம் கன அடி நீர் ஒகேனக்கலை கடந்து வெள்ளமாக சீறிப் பாய்ந்து வருகிறது.

இந்நிலையில் காவிரி டெல்டா பாசன விவசாயத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தண்ணீரை திறந்துவிட்டு, காவிரி நீருக்கு மலர் தூவினர். முதலில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக இன்று மாலைக்குள் 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும் எனவும், இந்த நீர் டெல்டா பகுதிகளில் உள்ள 700-க்கும் மேற்பட்ட குளங்கள், ஏரிகளில் தேக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு

You'r reading 100 அடியை கடந்தது மேட்டூர் அணை : ஒரே நாளில் 20 அடி உயர்வு இன்று நிரம்ப வாய்ப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு ஆபத்தா? வருகிறது ஹார்மனி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்