அசுரன் படம் பார்த்து பாராட்டு.. ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி..

Actor Dhanush thanked M.K.Stalin for his wishes for Asuran movie

அசுரன் படத்தைப் பார்த்து விட்டு தன்னை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் அசுரன் திரைப்படத்தை நேற்று(அக்.16) பார்த்தார். இதன்பின், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும்-சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்.

கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள் என்று பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், வெற்றிமாறன், தனுஷ் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து, நடிகர் தனுஷ் ட்விட்டரில், காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

You'r reading அசுரன் படம் பார்த்து பாராட்டு.. ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அசுரன் படம் அல்ல பாடம்.. வெற்றி மாறன், தனுஷுக்கு தொலைபேசியில் ஸ்டாலின் வாழ்த்து

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்