அரசியலில் ரஜினியுடன் இணைவது எப்போது? கமல்ஹாசன் பேட்டி

When will kamal join hands with Rajini?

ரஜினியுடன் இணைவது எப்போது இப்போது சொல்ல முடியாது என்று கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று(நவ.20) காலையில் நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் ம.நீ.ம. போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளுடன் கருத்துகள் கேட்கப்பட்டன. ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கமல் பேசும் போது, மக்களுக்கு நம் மீது நம்பிக்கை இருக்கிறது. வருங்காலத்தில் நமக்கு பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

கூட்டத்திற்கு பின்பு, நிருபர்களுக்கு கமல் ஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நானும், ரஜினியும் தேவைப்பட்டால், தமிழக மக்களின் நலன் கருதி இணைவோம். ரஜினியுடன் இணைப்பு என்பதை இந்த தேதியில் என்றெல்லாம் சொல்ல முடியாது. தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று பேசியிருக்கிறோம். எங்கள் இருவரின் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் முக்கியம் என கூறினார்.

You'r reading அரசியலில் ரஜினியுடன் இணைவது எப்போது? கமல்ஹாசன் பேட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொத்துவரி உயர்வு ரத்து.. சர்க்கரை கார்டுக்கு அரிசி.. உள்ளாட்சி தேர்தல் நிச்சயம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்