ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. 63 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று(டிச.27) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போடப்பட்டு வந்தது. தற்போது முதல்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இன்றும்(டிச.27), 30ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இன்று காலை தொடங்கிய முதல் கட்டத் தோ்தலில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவி, 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா் பதவி, 4,700 கிராம ஊராட்சித் தலைவா் பதவி, 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் 4 பதவிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுவதால் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

மொத்தம் 24,680 வாக்குச் சாவடிகள் பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் ஒரு கோடி 30 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மொத்தம் 63,079 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஆயுதப்படை காவலா்கள் 9,959 போ் மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் 4,700 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அதோடு ஊா்க்காவல் படையினா், ஓய்வு பெற்ற ராணுவ வீரா்கள், ஓய்வு பெற்ற காவலா்கள், ஓய்வு பெற்ற வன காவலா்கள் என்று 4,500 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

You'r reading ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.. 63 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நல்ல நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்.. மத்திய அரசு அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்