டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி..

பிரதமர் மோடியைத் தொடர்ந்து, டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு என்ற சாகச நிகழ்ச்சி, ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாகும். பியர்கிரில்ஸ் என்பவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், மக்கள் நடமாட்டமே இல்லாத மலை, அடந்த வனப்பகுதியில் பியர்கிரில்ஸுடன் இறக்கி விடப்படுவார்கள்.
ஆள் அரவமற்ற அடந்த வனத்தில் தனியாளாக எப்படி அந்த பிரபலம் செயல்படுகிறார் என்பதுதான் நிகழ்ச்சி. மேலும், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது குறித்து பியர்கிரில்ஸ் கற்றுத் தருகிறார். இதை வீடியோவில் பதிவு செய்து பின்னர் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்ப்படும். இந்த சாகச நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சியாகும்.

கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். நமது பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு பங்கேற்றார். உத்தரகாண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்குப் பாதுகாப்பை மையக் கருத்தாக கொண்டு, பங்கேற்ற 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சி, பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து பங்கேற்றுள்ளார்.

You'r reading டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள்.. பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்