புதிதாக 2 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை திறந்தது மதுவிலக்கா?மு.க.ஸ்டாலின் கேள்வி

புதிதாக 2 ஆயிரம் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்து விட்டு, படிப்படியாக மதுவிலக்கு என்று பேசுவதா என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டிருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 2 ஆயிரம் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரசு திறந்திருக்கிறது. மேலும், 200 டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க உள்ளது என்று ஒரு ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அதில் அவர், கடந்த 3ஆண்டில் 2000-க்கும் மேலான டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம். படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது? சட்டப் பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது! என்று குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading புதிதாக 2 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை திறந்தது மதுவிலக்கா?மு.க.ஸ்டாலின் கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கிரிமினல்களுக்கு சீட்.. அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்