ரூ.750 கோடி வங்கி மோசடி - சுபிக்zwnjஷா நிறுவன உரிமையாளர் கைது

சுபிக்zwnjஷா நிறுவன உரிமையாளர் சுப்ரமணியம் ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுபிக்‌ஷா நிறுவன உரிமையாளர் சுப்ரமணியம் ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய சில்லறை விற்பனையில் சுபிக்ஷா பல்பொருள் அங்காடி ஈடுபட்டு வருகிறது.

1997ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் உரிமையாளர் சுப்ரமணியன். 1,600 கிளைகள் கொண்ட இந்நிறுவனம் 2009ஆம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக முடங்கியது.

இந்நிலையில் ரூ.750 வங்கி மோசடி செய்ததாக இந்நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியனை இன்று சென்னையில் அமலாக்கத் துறையால் கைது செய்தனர். இவர் 13 வங்கிகளில் முறைகேடான வகையில் கடன் பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுப்ரமணியம் மீது ஏற்கனவே 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பேங் ஆஃப் பரோடா வங்கியில் ரூ.77 கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தவில்லை என்று அமலாக்கத் துறையால் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அப்போது சுப்ரமணியனுக்குச் சொந்தமாக மரக்காணம் மற்றும் நீலாங்கரையில் இருந்த சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதற்கு முன்னரே சுப்ரமணியத்திற்குச் சொந்தமான விவசாய நிலம் மற்றும் காலி நிலங்கள் அமலாக்கத் துறையால் கையகப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading ரூ.750 கோடி வங்கி மோசடி - சுபிக்zwnjஷா நிறுவன உரிமையாளர் கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவிக்கு இறுதி சடங்கு! - ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்