ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்..

சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 8 பேர், நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி, சுப்பிரமணியம் பிரசாத் ஆகிய 9 பேர் பதவியேற்றனர்.

தற்போது இவர்கள் அனைவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று 9 நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இவர்களில் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டெல்லி ஐகோர்ட் நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டதால், மற்ற 8 நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்றனர். இவர்களுக்குச் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஐகோர்ட்டில் மொத்தம் உள்ள 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது 21 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பொருளாதார சுனாமி.. மத்திய அரசுக்கு ராகுல் கடும் எச்சரிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்