முதல்வருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு...

P.M.Modi spoke to Edappadi palanisamy about curfew and corona preventive steps.

தமிழக நிலைமை குறித்து விசாரிப்பு...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ஊரடங்கு நிலவரம் குறித்து விசாரித்தறிந்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இது வரை இந்நோய்க்கு 17 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சூழலில், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் மாநில முதல்வர்களை தொடர்பு கொண்டு, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வருகிறார். இன்று காலையில் அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, தமிழகத்தில் ஊரடங்கு நிலவரம், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் பிரதமர் கேட்டறிந்தார். மேலும், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.

You'r reading முதல்வருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வங்கிக் கடன்களுக்கு 3 மாத தவணை செலுத்த தேவையில்லை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்