தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயக்க அனுமதி..

Govt. allowed autorickshaw to run from tommorow.

தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் இயக்க அரசு அனுமதியளித்துள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிகிறது. எனினும், தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தி வருகிறது.


இதன் தொடர்ச்சியாக, நாளை(மே23) முதல் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதன்படி, காலை 7 மணி முதல் இரவு 7 மணி ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் இயங்கலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ளவர்கள் ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை.
ஆட்டோக்களில் பயணிகளுக்கு கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். ஓட்டுநரும், பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும். ஒரு ஆட்டோவில் ஒரு பயணி மட்டுமே செல்லலாம். ஆட்டோக்களை 3 முறை சுத்தம் செய்ய வேண்டும். ஓட்டுநர் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்தில் நாளை முதல் ஆட்டோக்கள் இயக்க அனுமதி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமலை பட்டாம்பூச்சியில் ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் திடீர் மரணம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்