இஸ்லாமியர்கள் இன்று ரமலான் கொண்டாட்டம்.. வீட்டிலேயே தொழுகை..

Triplicane Big mosque closed for devotees on #EidUlFitr since COVID19 lockdown.

முஸ்லிம் மக்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கொரோனா ஊரடங்கால் மசூதிகள் மூடப்பட்டிருப்பதால், அவர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.இஸ்லாம் மதத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது முக்கியமான ஒன்றாகும். ரமலான் மாதம் முழுவதும் சூரியன் உதிக்கும் முன்பாக உணவு அருந்தி விட்டு, சூரியன் மறையும் வரை நோன்பு இருப்பார்கள். ரமலான் மாத முடிவில் பிறை தெரிந்ததும் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். நேற்று பிறை தெரிந்ததால் இன்று ரமலான் கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப் அறிவித்தார்.


இதன்படி, தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடினர். கொரோனா ஊரடங்கால் திருவல்லிக்கேணி பெரிய மசூதி உள்பட அனைத்து மசூதிகளும் மூடப்பட்டிருப்பதால், இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தினர்.
பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரும் ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

You'r reading இஸ்லாமியர்கள் இன்று ரமலான் கொண்டாட்டம்.. வீட்டிலேயே தொழுகை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியாவில் கொரோனா பலி 4021 ஆக அதிகரிப்பு.. 1.38 லட்சம் பேருக்கு நோய் பாதிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்