தமிழகத்தில் இது வரை 42,687 பேருக்கு கொரோனா.. சென்னையில் 30 ஆயிரம் தாண்டியது

Covid-19 cases crossed 30,000 in chennai.

தமிழகத்தில் நேற்று வரை 42,687 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1989 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேரும் அடக்கம்.


தமிழகத்தில் நேற்று பாதித்த 1989 பேரையும் சேர்த்தால் தற்போது கொரோனா பாதிப்பு 42,687 பேருக்குக் கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு நேற்று 30 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 397 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று 17,911 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 6 லட்சத்து 91,817 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் நேற்று 1484 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 30,444 ஆக அதிகரித்துள்ளது.செங்கல்பட்டில் நேற்று 136 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 2705 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் 1787 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 672 பேருக்கும், கடலூரில் 533 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.

You'r reading தமிழகத்தில் இது வரை 42,687 பேருக்கு கொரோனா.. சென்னையில் 30 ஆயிரம் தாண்டியது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மகளை ஷூட்டிங் அனுப்ப மாட்டேன்.. தந்தை பிடிவாதம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்