தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3.5 லட்சமானது.. பலி 6129 ஆக உயர்வு..

corona cases in tamilnadu crossed 3.5 lakhs.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3.55 லட்சமாக அதிகரித்துள்ளது. பலியானவர் எண்ணிக்கையும் 6129 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல தொழில்கள் முடங்கிப் போய் விட்டன. ஆனாலும், கொரோனா பரவல் கட்டுப்பட்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.19) ஒரே நாளில் 5795 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 55,449 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.மருத்துவமனைகளிலிருந்து நேற்று வீடு திரும்பிய 6384 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 96,171 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 116 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 6123 ஆக உயர்ந்தது. தற்போது 53,155 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும் 200 பேருக்குக் குறையாமலும் தொற்று கண்டறியப்படுகிறது.

சென்னையில் நேற்று 1186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 20,267 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 315 பேருக்கும், காஞ்சிபுரம் 257, திருவள்ளூர் மாவட்டத்தில் 393 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 21,824 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 21,005 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தேனி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டுகிறது. இது வரை கொரோனா பாதிப்பு மிகக் குறைவாக இருந்த நீலகிரி, பெரம்பலூர், நாமக்கல், நாகை மாவட்டங்களிலும் கூட தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3.5 லட்சமானது.. பலி 6129 ஆக உயர்வு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹெலிகாப்டரில் பறந்த பசு.. லைக்குகளை குவிக்கும் விவசாயியின் `பாசம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்