சென்னை, செங்கல்பட்டில் தொடரும் கொரோனா பரவல்..

corona cases in tamilnadu rise 3.97 lakhs.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் குறையவே இல்லை. சென்னையில் தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும் மற்ற மாவட்டங்களில் 300 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.27) 5958 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 14 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 97,261 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5606 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 38,060 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 118 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 6,839 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 52,362 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1287 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 29,247 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 294 பேருக்கும், காஞ்சிபுரம் 329, திருவள்ளூர் 280 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் இந்த மாவட்டங்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று தெரிய வருகிறது.

செங்கல்பட்டில் இது வரை 24,428 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 16,295 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 23,331 ஆக உயர்ந்துள்ளது. கோவை, சேலம், கடலூர், தேனி போன்ற மாவட்டங்களில் ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. இப்போது அந்த மாவட்டங்களிலும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் தேனி மாவட்டத்தில் 184 பேர் சேலத்தில் 451, கோவை 484 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதே போல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்படப் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.

You'r reading சென்னை, செங்கல்பட்டில் தொடரும் கொரோனா பரவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கைதான பெண்.. ஆன்லைன் ஆர்டர்.. போதைப்பொருள் கண்காணிப்பில் கர்நாடகாவின் முக்கிய தலைகள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்