தேசிய கண்தான நாள்.. கண்தானம் அளித்தார் முதல்வர் எடப்பாடி..

tamilnadu chief minister Edappadi palanisamy donated his eyes,

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை தேசிய கண் தானம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, செப்.8ம் தேதியன்று(நாளை) தேசிய கண்தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.


இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்வதாக அறிவித்துள்ளார். நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி, அவர் கண் தானம் செய்வதற்கான படிவத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். இதையடுத்து, கண்தானம் செய்வதற்கான சான்றிதழை அவருக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை வழங்கியுள்ளது. நேற்று அளிக்கப்பட்ட அந்த சான்றிதழை திட்ட இயக்குனர் டாக்டர் சந்திரகுமார் கையெழுத்திட்டு அளித்திருக்கிறார்.


பொது மக்கள் மத்தியில் கண் தானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்து முன்னுதாரணமாக இருப்பதாக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading தேசிய கண்தான நாள்.. கண்தானம் அளித்தார் முதல்வர் எடப்பாடி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரூபாய் 15000 ஆரோக்கிய காப்பீடு - புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயன்படும் ஆவாஸ் காப்பீடு திட்டம்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்