தமிழகத்தில் கொரோனா பலி 8012 ஆக அதிகரிப்பு..

corona cases increased to 4.74 lakhs.

தமிழகத்தில் இது வரை 4.74 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 4.16 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். 8012 பேர் பலியாகியுள்ளனர்.மாநிலம் முழுவதும் நேற்று(செப்.8) 5684 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 2 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 74,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6599 பேரையும் சேர்த்தால், இது வரை 4 லட்சத்து 16,715 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 87 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 8012 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 50,213 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று 988 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை ஒரு லட்சத்து 43,602 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 28,994 பேருக்கும், கோவையில் 446 பேருக்கும், கடலூரில் 407 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூரில் 277 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 407 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.செங்கல்பட்டில் இது வரை 28,991 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 18,628 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 26,841 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் குறையவில்லை.

You'r reading தமிழகத்தில் கொரோனா பலி 8012 ஆக அதிகரிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வாய் துர்நாற்றத்தைப் போக்கும்..இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும் - உலர் திராட்சை மருத்துவப் பயன்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்