ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்.. உதயநிதியின் திடீர் போர்க்கொடி!

Royalty should be given to Stalin Says Udayanidhi

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுகவின் பொதுக்குழு இன்று நடந்தது. இதில் எதிர்பார்த்தது போலவே, திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் எதிர்ப்பை சமாளிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா நியமனம் செய்யப்பட்டனர். மேலும் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கே கொண்டுவரவேண்டும். அருந்ததியர் உள்ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கிடையே, பொதுக்குழு குறித்த பேட்டியளித்த உதயநிதி, `Zoom செயலியை கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். அதற்கு காரணம், இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தின் நிகழ்வுகள் அனைத்தையும் Zoom செயலி மூலமாகவே நடத்தினார் ஸ்டாலின்.

தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளா் தலைமையில் அந்தந்த மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பொதுக்குழு உறுப்பினா்கள் என அனைவரும் Zoom செயலி வழியாகவே, பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதை வைத்தே உதயநிதி, `Zoom செயலியை கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும். ஏனெனில் மொத்த பொதுக்குழுவையும் Zoom-ல் நடத்தி உள்ளார்" என்று ஜாலியாக பேசியுள்ளார்.

You'r reading ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும்.. உதயநிதியின் திடீர் போர்க்கொடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஐடிஆர் ( ITR - Income Tax Return ) பதிவை இணையம் மூலம் செய்வது எப்படி ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்