சசிகலாவுக்கு 3 முக்கிய நிபந்தனைகள் விதித்த பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம்!

கணவர் நடராஜனின் மரணத்தைத் தொடர்ந்து சசிகலாவுக்கு பரோல் வழங்கியுள்ள, பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

கணவர் நடராஜனின் மரணத்தைத் தொடர்ந்து சசிகலாவுக்கு பரோல் வழங்கியுள்ள, பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடநத் 16ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். அவருக்கு செயற்கை சுவாச கருவிமூலம் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

நடராஜனுக்கு ஏற்கனவே சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது. இதனால், கடந்த ஆண்டு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று அதிகாலை நடராஜன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சென்னை பெசன்ட் நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், நடராஜனின் மனைவியுமான சசிகலா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டு கால தண்டனையை அனுபவித்து வருகிறார்.

கணவரின் மரணத்தைத் தொடர்ந்து தனக்கு பரோல் வழங்குமாறு சசிகலா, பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரியிடம் விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு 15 நாள் பரோல் வழங்கி சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 3 நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அவை,

1. எண் 12, பரிசுத்தமா நகர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும்.

2. பரோல் காலகட்டத்தில் எந்த விதத்திலும் ஊடகங்களைச் சந்திப்பது அல்லது பத்திரிகையாளர்களிடம் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

3. பரோல் காலகட்டத்தில் அரசியல் ரீதியிலான சந்திப்புகளோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோ நிச்சயம் கூடாது என்பவையாகும்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading சசிகலாவுக்கு 3 முக்கிய நிபந்தனைகள் விதித்த பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்