கடப்பாறையால் நெம்பினாலும் முடியாது சொடக்கு போட்டால் முடியுமா - ஸ்டாலினுக்கு முதல்வர் கேள்வி

மு.க ஸ்டாலின் ஒரு சொடக்கு போட்டால் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறி உள்ளார். கடப்பாறை கொண்டு நெம்பினாலும் அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மு.க ஸ்டாலின் ஒரு சொடக்கு போட்டால் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறி உள்ளார். கடப்பாறை கொண்டு நெம்பினாலும் அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முன்னதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அறிவியல்படி வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட்டு விடும். எனவே வெற்றிடம் எதுவும் இல்லை. திமுகவில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி இன்னும் ஒருவாரத்தில் இருக்காது.

இந்த ஆட்சியை கலைத்து நாம் ஆட்சியை பிடிக்கப்போவது இல்லை. சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா? எனவே நாம் ஆட்சியை கலைக்க மாட்டோம்.

ஜெயலலிதாவின் 70-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு. அதிமுக சார்பில் 86 ஏழை ஜோடிகளுக்கு கோவையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமண விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கினார். விழாவில் பொள்ளாச்சி ஜெயராமன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வசதிகளை அதிமுக அரசு செய்துள்ளது. அதிமுக ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது.

திமுக மாநாட்டில் பேசிய மு.க ஸ்டாலின் ஒரு சொடக்கு போட்டால் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விடும் என கூறி உள்ளார். கடப்பாறை கொண்டு நெம்பினாலும் அதிமுக ஆட்சியை எதுவும் செய்ய முடியாது. அதிகாரத்தை விரும்பும் அளவுக்கு மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறையில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கடப்பாறையால் நெம்பினாலும் முடியாது சொடக்கு போட்டால் முடியுமா - ஸ்டாலினுக்கு முதல்வர் கேள்வி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 107 ரன்னில் சுருண்டது ஆஸி. - 322 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. இமாலய வெற்றி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்