உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.. ஸ்டாலினை தொடர்ந்து விமர்சிக்கும் கமல்!

kamal condemns edappaadi government announcement

கொரோனா தொற்று குறித்து நேற்று பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழக அரசின் செலவில் அனைவருக்கும் இலவசமாக ஊசி போடப்படும்" எனக் கூறியிருந்தார். இதே அறிவிப்பை, பாஜக பீகார் தேர்தல் வாக்குறுதியிலும் கூறப்பட்டிருந்தது. இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி இன்னும் ஆராய்ச்சி கட்டத்திலேயே இருக்கிறது. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கையில் ஒவ்வொரு கட்சிகளும், அதை வாக்கு அறுவடைக்காக பேச ஆரம்பித்து இருப்பது தான் எதிர்ப்புக்கு காரணம்.

நேற்று எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஸ்டாலின் ``இலவச #CoronaVaccine-ஐ மக்களுக்கு தான் காட்டும் சலுகை என நினைக்கிறாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை!. நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி செய்ய மனமில்லாதவர், தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை!" என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே... தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல. மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

இன்னும் வராதா தடுப்பூசிக்கு இவ்வளவு அக்கப்போரா!

You'r reading உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்.. ஸ்டாலினை தொடர்ந்து விமர்சிக்கும் கமல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடுக்கான ஆன்லைன் கலந்தாய்வு வரும் 27ந்தேதி தொடங்குகிறது...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்