எடப்பாடியை டென்ஷனாக்கிய இளைஞர்கள்.... சசிகலா பெயரால் பசும்பொன்னில் நடந்த சம்பவம்!

The youth who tensed CM Edappadi in pasumpon

தமிழக அரசு சமீபத்தில் அரியர் தேர்வுகளை ரத்து செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்கு சென்றாலும் இளைஞர்கள் ``அரியர் மாணவர்களின் அரசனே'' என்பது போன்ற பல்வேறு வாழ்த்து மொழிகளை கூறி அவரை குஷிப்படுத்தினர். இந்த வீடியோகள் இணையத்தில் வைரலாகி வந்தன. இதற்கிடையே, இதேபோன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சில இளைஞர்கள் டென்ஷனாக்கிய சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவுக்குச் சென்றிருந்தார். காரில் எடப்பாடி பழனிசாமி சென்று கொண்டிருக்கும் போது சிலர் அவரை வணக்கம் வைத்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள், அந்தக் கூட்டத்தில் சத்தமாக, தியாக தலைவி சின்னம்மா என்று சசிகலாவை குறிப்பிட்டு பலமுறை கத்தத் தொடங்கினர். இதனால் அங்கு ஒரு நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது. எடப்பாடிக்கு காவலுக்கு சென்றிருந்த காவலர்கள் முகம் ஒரு நிமிடம் இறுக்கமாக இருந்ததையும் காண முடிந்தது. இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதேபோல் பசும்பொன்னுக்கு வருவதற்கு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GOBACKSTALIN என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்!

">

You'r reading எடப்பாடியை டென்ஷனாக்கிய இளைஞர்கள்.... சசிகலா பெயரால் பசும்பொன்னில் நடந்த சம்பவம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரே நாளில் 20 ஆயிரம் பத்திரங்கள் பதிவு : 123 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்