விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை.. கட்சி விவகாரத்தில் எஸ்.ஏ.சி விளக்கம்!

SAC explains about new political party

திரைப்பட நடிகர்கள் அரசியலில் கால்பதிக்கும் காலம்போல் இது. நீண்ட நாள்களாக அரசியலில் வரவுள்ளதாக ரஜினி அறிவித்து வந்த நிலையில் கமல் திடீரென மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும் செய்தார். இந்த வரிசையில் சில வருடங்களாக அரசியல் நோக்கத்துடன் பேசி வந்த நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க விண்ணப்பம் செய்து இருக்கிறார்.

கட்சி தொடங்குவது தொடர்பாக கடந்த வாரம் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில், விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்திய விஜய், தற்போது தலைமை தேர்தல் ஆணையத்தில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் கட்சியை பதிவு செய்தார் எனத் தகவல் பரவியது. அந்த விண்ணப்பத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி பெயர் பொதுச்செயலாளராகவும், அவரின் அம்மா ஷோபா சந்திரசேகர் பொருளாளர் என்றும் போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேசியிருக்கிறார். அதில், ``அரசியல் கட்சியை பதிவு செய்ததுக்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க, முழுக்க என் முயற்சியே. இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விஜய் மக்கள் இயக்கம் இன்று, நேற்றல்ல 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் இருக்கும் இளைஞர்களின் சக்தி வீணாக கூடாது; அவர்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த முயற்சி" என்று விளக்கம் அளித்துள்ளார்.

You'r reading விஜய்க்கு எந்த சம்பந்தமும் இல்லை.. கட்சி விவகாரத்தில் எஸ்.ஏ.சி விளக்கம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த டிஒய்எப்ஐ தொண்டர் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்