எந்த நேரமும் விடுதலை.. சசிகலா ஆதரவாளர்களை குஷிப்படுத்தும் நன்னடத்தை `கணக்கு!

sasikala will out from jail on anytime

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவரது வக்கீல்கள் செலுத்தியுள்ளனர். வங்கி வரைவோலையை(டிடி )பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி சிவப்பாவிடம் வக்கீல்கள் சி.முத்துகுமார், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் செலுத்தினர். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கான அபராத தொகை ஓரிரு நாளில் செலுத்தப்படும் என்று தெரிகிறது.

இதையடுத்து, சசிகலா விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளது. அனேகமாக அவர் டிசம்பர் கடைசியில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மகளுக்கு ஜனவரியில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் சசிகலா கலந்து கொள்வார் என்றும் சசிகலாவின் வருகையால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்றும் பேசப்படுகிறது.

இந்நிலையில் சசிகலா எந்த நேரம் வேண்டுமானாலும் விடுதலை ஆக வாய்ப்பு இருக்கிறது என்று அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ``ஜனவரி 27-ந் தேதி விடுவிக்கப்படுவார் என்று ஏற்கெனவே ஆர்டிஐயில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் இன்னும் 68 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருக்க வேண்டிவரும். அதேநேரம் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் 129 நாட்கள் சலுகை உள்ளது. கர்நாடக சிறை விதிப்படி

அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். தற்போது சசிகலா 43 மாத காலம் சிறையில் இருந்துள்ளார். இந்த 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் வைத்தால், 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்படும். இதனால் அவர் எந்த நேரமும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படலாம்" என்று அதில் கூறியுள்ளார்.

You'r reading எந்த நேரமும் விடுதலை.. சசிகலா ஆதரவாளர்களை குஷிப்படுத்தும் நன்னடத்தை `கணக்கு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரூ 500 கோடி நஷ்ட ஈடு கேட்ட ரஜினி வில்லன்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்