தாமிரபரணி, மணிமுத்தாறு அணைகளை கண்காணியுங்கள்.. தமிழக அரசுக்கு வந்த அலர்ட்!

வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல் உருவெடுக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இலங்கையில் திரிகோணமலையில் இருந்து 750 கிமீ, கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 1150 கிமீ தொலைவிலும் உள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறலாம். அதிலிருந்து மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பிருக்கிறது. புயலாக மாறினால் அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் பயணித்து டிச.2ம் தேதி மாலையில் இலங்கை கடற்கரையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ``தமிழகத்தில் அதி தீவிர மழை எச்சரிக்கையை அடுத்து ஆறுகளின் கரைகளை கண்காணிக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் செய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது". மேலும் டிசம்பர் 2,3,4ம் தேதிகளில் அதிகமான மழை பொழியும் என்பதால் மக்களை பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை செய்துள்ளது.

You'r reading தாமிரபரணி, மணிமுத்தாறு அணைகளை கண்காணியுங்கள்.. தமிழக அரசுக்கு வந்த அலர்ட்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முன்னாள் நீதிபதி கர்ணனை ஏன் கைது செய்யவில்லை? உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்