சாதிவாரி கணக்கெடுப்பு... தனி ஆணையம் அமைத்த முதல்வர் எடப்பாடி!

பாமக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் பல ஆண்டு கோரிக்கை சாதிவாரி கணக்கெடுப்பு. இதற்கு பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்த நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு செவி சாய்த்துள்ளார். சாதி ரீதியான புள்ளிவிரங்களைச் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``ஜெயலலிதா, தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பினைப் பெற்றுத் தந்து, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்று அனைவராலும் போற்றப்படுகிறார்.

தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே, தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன்பயன் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், 69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற நிலையில், இவ்வழக்கையும் எதிர்கொள்ள சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவைப்படுகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தைச் சேகரிப்பதால் மட்டுமே முழுத் தகவல் கிடைக்கப் பெறும் என்ற அடிப்படையில் தற்போதைய நிலவரப்படியான சாதிவாரிய புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க தனி ஆணையம் ஒன்று அமைக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

You'r reading சாதிவாரி கணக்கெடுப்பு... தனி ஆணையம் அமைத்த முதல்வர் எடப்பாடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புரவி புயல் எப்போது கரையைக் கடக்கும்? எங்கெங்கு மழை பெய்யும்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்