திமுகவுடன் கூட்டணி கிடையாது.. கமல் திட்டவட்டம்!

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரச்சாரத்தைக் கடந்த 20ஆம் தேதி முதல் திருக்குவளையில் இருந்து துவக்கினார்.தினமும் கைது, பின்னர் விடுதலை, பிரச்சாரம் என்று மாறி மாறி உழன்று வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது புயல் எச்சரிக்கை காரணமாகத் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். இதேபோல் ஸ்டாலினும் முதல்கட்ட பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த 12 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். தற்போது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் இருக்கிறார் கமல்.

இதற்கிடையே, இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்த கமல் செய்தியாளர்களிடம் பேசினார். ``அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நிறைவற்றப் போகும் 7 அம்ச திட்டத்தை அறிவிக்கிறேன். இதில் நான் பெருமையடைகிறேன். எனது 5 வயது முதல் 60 வயது வரை என் மீது புகழ் வெளிச்சம் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வந்த பின்பு தமிழக மக்கள் என் மீது காட்டும் அன்பு அளவிட முடியாததாக இருக்கிறது. திமுக, அதிமுக கட்சிகளுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்காது. ஊழல்களை ஒழித்தாலே தமிழகம் தற்போது இருக்கும் நிலையை விட 4 மடங்கு வளர்ச்சியடையும்" என்று கூறி இருக்கிறார்.

You'r reading திமுகவுடன் கூட்டணி கிடையாது.. கமல் திட்டவட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஏழு பயிற்சியாளர்களுடன் களமிறங்கும் இங்கிலாந்து அணி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்